தமிழ்நாடு

tamil nadu

வாக்குப்பெட்டியை எடுக்கவிடாமல் தகராறு: தலை உருளும் போலீசாருக்கு..!

By

Published : Oct 7, 2021, 9:53 AM IST

g
g ()

தென்காசி: ஆலங்குளம் அருகே வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப் பெட்டியை எடுக்கவிடாமல் இருதரப்பினர் தகராறில் ஈடுபட்டதால் அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்வி என்பவர் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார். நாரணாபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (அக்டோபர் 6) காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவந்தது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று மாலை திடீரென வேட்பாளர் செல்வி தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தத் தகராறின்போது செல்வியின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

தகராறு

இது குறித்து தகவலறிந்த நாரணாபுரம் காவல் துறையினர் வாக்குச்சாவடி முன்பு குவிந்தனர். தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பெட்டிகளை எடுக்கவிடாமலும் பிரச்சினை செய்தனர்.

இதன் காரணமாக நாரணாபுரம் வாக்குச்சாவடியில் பணியாற்றிய 14 வாக்குச்சாவடி அலுவலர்கள் அறைக்குள் பாதுகாப்பாகப் பூட்டிவைக்கப்பட்டனர். வாக்குப் பெட்டியை எடுக்க விடாமல் இருதரப்பினர் தகராறில் ஈடுபட்டதால் அங்கு 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆடு திருடிய இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி கைது

ABOUT THE AUTHOR

...view details