தமிழ்நாடு

tamil nadu

ஜிகா வைரஸ் - புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு

By

Published : Jul 15, 2021, 7:57 AM IST

ziga virus

ஜிகா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக - கேரள எல்லையான தென்காசி புளியரை சோதனை சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென்காசி: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா தொற்றின் 2ஆம் அலை கட்டுக்குள் வருவதற்குள், ஜிகா வைரஸ் தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் இந்த வைரஸ் நோய்க்கு கேரளாவில் 20க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு-கேரள எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு

அதன்படி, தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

அங்கிருந்து வருபவர்கள் உடல் வெப்ப பரிசோதனையும், கரோனா பரிசோதனையும் மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க:இ-பதிவு கட்டாயம்: கொடைக்கானலில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பீதி

ABOUT THE AUTHOR

...view details