தமிழ்நாடு

tamil nadu

ராமேஸ்வரம் டூ அயோத்தி.. 2800 கி.மீ., நடைபயணம்.. ராணுவ வீரர் கரோனா விழிப்புணர்வு பயணம்!

By

Published : Oct 24, 2021, 10:03 AM IST

ராணுவ வீரர், பாலமுருகன்
மானாமதுரை அருகே சோமாத்தூர் கிராமத்தை சேர்ந்த ()

இந்திய ராணுவ வீரர் ஒருவர், 197 நாட்டுக் கொடிகளை ஏந்தி கரோனா விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.

சிவகங்கை: மானாமதுரை அருகே சோமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கரோனா விழிப்புணர்வுக்காக 197 நாடுகள் கொடிகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு கையால் பிடித்து இழுத்து கொண்டே ராமேஸ்வரம், பாம்பன் பாலத்திலிருந்து சாலை மார்க்கமாக அயோத்தி வரை நடந்தே 2800 கி.மீ நடந்தே செல்கிறார்.

அயோத்தி வரை நடைபயணம்

கரோனோ காலகட்டத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்டியும், அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து விரைவாக கரோனோவை முற்றிலும் ஒழிக்க கூடிய தடுப்பூசியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும்; அனைவரும் தடுப்பூசிகள் போட்டுகொள்ள வேண்டும் என்ற வாசகங்கள் உள்ளடக்கிய பதாகைகளுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஒன்றையும், எடுத்துக்கொண்டு நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: மருது சகோதரர்கள் - இந்திய விடுதலைப்போரின் இணையற்ற அடையாளம்

ABOUT THE AUTHOR

...view details