தமிழ்நாடு

tamil nadu

ராஜகணபதிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம்!

By

Published : Sep 22, 2021, 7:42 AM IST

ராஜகணபதிக்கு பால் அபிஷேகம் நடைபெறுவது தொடர்பான காணொலி

விநாயகர் சதுர்த்தி நிறைவு நாளையடுத்து சேலம் ராஜகணபதிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சேலம்: சேலம் சின்னக் கடைவீதி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வாரம் ராஜகணபதிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த பத்து நாள்களாக ராஜகணபதிக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளான நேற்று (செப்.21), ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அப்போது இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 திரவியங்களால் ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ராஜகணபதிக்கு சிறப்பு பால் அபிஷேகம்

விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக 1,008 லிட்டர் பாலில் ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு ஐந்தாயிரம் வாழைப்பழங்கள், ஆப்பிள் உள்ளிட்டவைகள் படைக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:வன எல்லைகளில் கான்கிரீட் சுவர் கட்ட நிதி ஒதுக்கப்படும் - வனத்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details