தமிழ்நாடு

tamil nadu

கனமழையால் வேரோடு சாய்ந்த மரம்: முதியவர் படுகாயம்!

By

Published : Jun 24, 2021, 5:01 PM IST

கனமழையால் வேரோடு சாய்ந்த மரம்

ராணிப்பேட்டையில் பெய்த திடீர் மழையால் சாலையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் முதியவர் படுகாயமடைந்தார்.

ராணிப்பேட்டை: சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு (ஜூன்.23) இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் பல பகுதிகளில் மின் மாற்றி பழுதாகி இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது, சோளிங்கர் காவேரிப்பாக்கம் சாலையில் உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) என்ற முதியவர் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது சாலையின் ஓரமாக இருந்த பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அவர் மீது விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் பலத்த காயங்களுடன் மரங்களுக்கு இடையே சிக்கினார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக முதியவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் கிடந்த மரத்தை அகற்றிய அலுவலர்கள்:

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை, நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், சாலையில் கிடந்த மரத்தை அப்புறத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளர் பரந்தாமன் உத்தரவின்படி சாலை ஆய்வாளர் ஜானகிராமன் தலைமையில் ஜேசிபி உதவியுடன் வந்த ஊழியர்கள் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

வேரோடு சாய்ந்த மரம்

இதேபோல், பாணாவரம் சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கறவை பசுமாடு ஒன்று இடி தாக்கி உயிரிழந்தது.

இதையும் படிங்க: பண்ருட்டி அருகே இடி விழுந்து அக்கா, தம்பி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details