தமிழ்நாடு

tamil nadu

போலி ஆவணங்கள் மூலம் கூட்டுறவு வங்கியில் ரூ 1.45 கோடி கையாடல்

By

Published : Oct 19, 2021, 8:51 PM IST

கையாடல்

கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்களை தயார் செய்து 1 கோடியே 45 லட்சம் ரூபாய் கையாடல் செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த நயினார் கோயிலில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இங்கு பரமக்குடியைச் சேர்ந்த பூரண சந்திரமதி கிளை மேலாளராகவும், சத்தியமூர்த்தி கிளை துணை மேலாளராகவும், சுந்தரகாளீஸ்வரி உதவி மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் மகளிர் குழுக்கள் இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து 59 சேமிப்பு கணக்கிலிருந்து, கடந்த 6 ஆண்டுகளில் மட்டும், 1 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியது கணக்கு எழுதி மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து துணை பதிவாளர் கோவிந்தராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், போலியான ஆவணங்கள் பயன்படுத்தி பணம் கையாடல் செய்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:மக்களுக்காக உதவ கலெக்டர் அலுவலகம் 24 மணிநேரமும் திறந்தே இருக்கும் - ராமநாதபுரம் புதிய ஆட்சியர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details