தமிழ்நாடு

tamil nadu

சாலையை சீர்படுத்த கோரி முக்காடிட்டு நூதன போராட்டம்

By

Published : Aug 1, 2022, 1:22 PM IST

சாலைவசதி சரியில்லை- பொதுமக்கள் முக்காடிட்டு நூதன போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையை சீர்படுத்த கோரி ஆண்களும், பெண்களும் தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்:கடலாடி அருகே மேலச்செல்வனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேரங்குளம் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அனைவரும் விவசாயம் மற்றும் கருவேல மரங்களை வெட்டி கூலித்தொழிலாளிகளாக தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது கிராமத்திற்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், அவசர மருத்துவ சிகிச்சைக்கு அருகில் உள்ள கடலாடிக்கு செல்ல முடியவில்லை எனவும், சாலை மோசமான நிலையில் உள்ளதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட தங்களது கிராமத்திற்கு வர மறுப்பதாக குற்றம்சாட்டினர்.

சாலைவசதி சரியில்லை- பொதுமக்கள் முக்காடிட்டு நூதன போராட்டம்

புதிய சாலை அமைக்க வேண்டி அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சாலையின் ஓரம் முக்காடு அணிந்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூதன முறையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சாலை வசதி அமைத்து தராவிட்டால் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

மழைக்காலம் துவங்கவுவதற்கு முன்பாகவே தங்களது கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அக்கிராம மக்கள் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:ஆடிப்பெருக்கு: வாழைப்பழம் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details