தமிழ்நாடு

tamil nadu

இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிறுத்தம்

By

Published : Dec 1, 2021, 7:28 PM IST

doordarshan, தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிறுத்தம்

இந்தியா முழுவதும் 412 தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழிஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளதால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியாவில் தரைவழி ஒளிபரப்பு மூலம் தொலைக்காட்சி காணும் வழக்கம் அரிதாகிவிட்டது. மக்கள் டிடிஎச், கேபிள் டிவி, இணையம் வழியாக தொலைக்காட்சி சேனல்களை காண்கின்றனர்.

இதனால், பிரசார் பாரதி நிறுவனம் நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ் மீட்டர் தொழில்நுட்பத்தை, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள 412 தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிலையங்களின் தரைவழி ஒளிபரப்பு சேவை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, ஊட்டி, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள த ரைவழி ஒளிபரப்பு அக்.31ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன. இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம், திருச்செந்தூரில் செயல்பட்டுவரும் தரைவழி ஒளிபரப்பு டிச.31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அதேபோல நெய்வேலி, ஏற்காட்டில் உள்ள ஒளிபரப்பு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதியிலும் நிறுத்தப்பட உள்ளன. அப்படி இந்தியா முழுவதும் உள்ள 412 தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழிஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளதால், இவற்றில் பணிபுரிந்து வரும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ராமேஸ்வரத்தில் 26 ஆண்டுகளாக தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தூர்தர்ஷன் அஞ்சல் நிலையத்தை வானொலி அஞ்சல் நிலையமாக மாற்ற கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details