தமிழ்நாடு

tamil nadu

அறந்தாங்கியில் கனமழைக்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதம்!

By

Published : Nov 1, 2019, 10:46 AM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் நேற்றிரவு பெய்த கனமழைக்கு பல வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் அறந்தாங்கி வடக்கு வீதியில் பத்மநாதன் என்பவரது வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த யாருக்கும் எந்த விதக் காயமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கிருந்த ஆட்டுக்குட்டியொன்று உயிரிழந்தது.

இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவரும் மழைக்கு இடிந்து விழுந்தது. கனமழையின் காரணமாக 21வது வார்டு சுக்கான் குளம் பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு அப்பகுதியிலுள்ள குளமும் சாலையும் ஒரே மட்டத்திலுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் குளத்திற்குள் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே வாகனங்களை இயக்குகின்றனர். மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகம் மக்களின் நலனை கருத்தில் கொணடு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இதையும் படிங்க:'திருவண்ணாமலையில் டெங்குவிற்கு ஒரு உயிரிழப்புகூட இல்லை'

Intro:Body:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று இரவு பெய்த மழையில் பல இடங்களில் வீடுகள் இடிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வடக்கு வீதி தெருவில் அதிகாலையில் பத்மநாதன் என்பவர் வீட்டில் அவரது மகன்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது மதில் சுவர்கள் திடீரென விழுந்தது. அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தனர் அப்போது வீடு முழுவதும் மழையில் உடைந்து தரைமட்டமானது இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் ஒரு ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. இதேபோல் அப்பகுதியில் உள்ள லட்சுமணன் என்பவரின் வீடு பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. கோட்டை ஒன்றாம் தெருவில் உள்ள 21_வது வார்டு சுக்கான் குளம் மழை நீரால் சூலப்பட்டு சாலையும் குளமும் ஒரே மட்டத்தில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர் .மேலும் அக்குளத்தில் சாக்கடை நீர் கலப்பதால் மழை நீருடன் சாக்கடை நீரும் சாலையில் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அறந்தாங்கி நகராட்சி மூன்றாவது நகராட்சி என தமிழக அரசால் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக உள்ளது என அப்பகுதி பெண்கள் கூறினர். அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் சாக்கடை நீரும் ஒன்றாக உள்ளதால் குடிநீரை கூட எடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் குளத்திற்குள் விழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்க்குல் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Conclusion:

ABOUT THE AUTHOR

...view details