தமிழ்நாடு

tamil nadu

வேங்கைவயல் கிராமத்தைப் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த சவுக்கு சங்கர்

By

Published : Jan 22, 2023, 10:58 PM IST

குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வேங்கை வயல் கிராமத்தைப் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கேட்டறிந்தார்.

வேங்கை வயல் கிராமத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சவுக்கு சங்கர்
வேங்கை வயல் கிராமத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சவுக்கு சங்கர்

வேங்கைவயல் கிராமத்தைப் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த சவுக்கு சங்கர்

புதுக்கோட்டை:வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. பின்னர் சிறுவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். பின் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டனர்.

பின்னர் மலம் கலக்கப்பட்டது உறுதியானது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதியில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதியில் இரட்டைக்குவளை முறை பயன்படுத்துவதும், பிற்படுத்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கோயிலுக்குள் ஆதிதிராவிட மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினர். தற்போது சிபிசிஐடி போலீசார் அப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை இன்று நேரில் சந்தித்தார்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் வாடிக்கிடக்கும் ரோஜா பூங்கா - கட்டணம் செலுத்திய சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details