தமிழ்நாடு

tamil nadu

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு - புதுக்கோட்டையில் விடிய விடிய சாலை மறியல் போராட்டம்

By

Published : Jan 6, 2023, 11:53 AM IST

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மக்கள் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று (ஜனவரி 6) நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாற்று தேதியில் நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த போட்டிக்காக தச்சன்குறிச்சியில் 15 நாட்களாக முன்னேற்பாடுகள் நடந்துவந்தன. நேற்று (ஜனவரி 5) காலை 11:00 மணியளவில் போட்டிகளை குறிப்பிட்ட தேதியில் நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்த மாவட்ட நிர்வாகம், மாலை 7 மணி அளவில் போட்டியை மாற்று தேதியில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த விழாக்குழுவினர் பொதுமக்களுடன் கந்தர்வகோட்டை - தஞ்சாவூர் சாலையில் நள்ளிரவு முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்கு மோதல் போக்கு நீடித்துவருவதாகவும், அதில் ஒரு தரப்பு திட்டமிட்டு போட்டியை ஒத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரவு முழுவதும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோது நள்ளிரவு 1:30 மணி அளவில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மாடுபிடி வீரர்களுக்கு கரோனா பரிசோதனை (RTPCR TEST) மேற்கொள்ள வேண்டும். அதற்கு கால தாமதமாகும் என்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும் மக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யநாதன் சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும், ரகுபதி சட்டத்துறை அமைச்சராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு தொடர்பான மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details