தமிழ்நாடு

tamil nadu

கடியாபட்டியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் கோலாகலம்

By

Published : Jan 17, 2023, 12:35 PM IST

கடியாபட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
கடியாபட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

திருமயம் அருகே கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் விமர்சையாக நடைபெற்றது. சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்

கடியாபட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மொத்தம் 35 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்ற இந்த பந்தயம் 3 சுற்றுகளாக நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு வெற்றிகோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த பந்தயத்தில் மதுரை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டிற்கு கடியாபட்டியிலிருந்து ராயவரம் வரை போக வர 12 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் 11 ஜோடிகள் கலந்துகொண்டன.

மறுபுறம் 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு சிறிய மாட்டு வகையில் நடைபெற்ற போட்டியில் 24 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் நின்று போட்டியை கண்டு ரசித்தனர்.

பெரிய மாட்டிற்கான போட்டியை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். சிறிய மாட்டிற்கான போட்டியை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்தார். அதோடு ‌முன்னாள் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்புராம்‌ கலந்துகொண்டார். மாட்டு வண்டி போட்டி பாதுகாப்பு பணிகளை பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் செய்திருந்தார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நிரந்தர வாடிவாசலில் ஜல்லிக்கட்டு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details