தமிழ்நாடு

tamil nadu

பள்ளி மாணவிகள் 7 பேருக்கு கரோனா: பள்ளி மூடல்

By

Published : Sep 29, 2021, 2:06 PM IST

c
c ()

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளி மூடப்பட்டது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவருடன் வகுப்பில் பயின்ற மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த மாணவி உள்பட மொத்தம் 7 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று (செப்.29) உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கரோனா தொற்றை தடுக்கும் வகையில், அந்த பள்ளி இன்று (செப்.25) முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டது.

இதற்கிடையே பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த மாணவரை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுரை கூறினார். மாணவருடன் இருந்த மற்ற மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை.

இதையும் படிங்க: அந்தமானுக்குப் புறப்பட்ட மாணவருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details