அந்தமானுக்குப் புறப்பட்ட மாணவருக்கு கரோனா!

author img

By

Published : Apr 9, 2021, 12:34 PM IST

flight

சென்னை: அந்தமானுக்கு விமானத்தில் செல்லவந்த கல்லூரி மாணவருக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவரின் பயணம் ரத்துசெய்யப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து அந்தமான் செல்ல வேண்டிய ஃகோ ஏா்வேஸ் விமானம் இன்று (ஏப்ரல் 9) காலை 8.15 மணிக்குப் புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் விமான நிறுவன கவுண்டரில் போா்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு, பாதுகாப்புச் சோதனை முடித்து விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தனா்.

அப்போது அந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த அந்தமானைச் சோ்ந்த கல்லூரி மாணவா் மடிம் சுவாமி (21) (MADEM SWAMY) என்பவா் போா்டிங் பாஸ் வாங்க வந்தாா். கவுண்டா் ஊழியா், அவரிடம் கரோனா மருத்துவப் பரிசோதனை சான்றிதழைக் கேட்டு வாங்கி சரிபாா்த்தாா்.

அதில் அவருக்குக் கரோனா தீநுண்மி நேர்மறை என்று இருந்தது. இதையடுத்து அவருக்குப் போா்டிங் பாஸ் கொடுக்க விமான ஊழியா் மறுத்தாா். அத்தோடு விமான நிலைய சுகாதாரத் துறைக்கும் தகவல் கொடுத்தாா்.

உடனடியாகச் சுகாதாரத் துறையினா் விரைந்துவந்து, மாணவரை விசாரித்தனா். அவா் அந்தமானில் பெற்றோருடன் உள்ளார். அவருடைய நண்பா்களைப் பாா்ப்பதற்காகச் சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்தாா்.

இங்கு அவருக்கு சிறிது சளித்தொல்லை இருந்தது. இதையடுத்து பரிசோதனை செய்ததில், கரோனா தீநுண்மி நேர்மறை என்று வந்தது. இதையடுத்து மாணவா் அவசரமாகத் தனது சொந்த ஊரான அந்தமானுக்கு விமானத்தில் சென்றுவிட முடிவுசெய்தாா். அதன்படி பயணச்சீட்டு முன்பதிவு செய்து பயணிக்க சென்னை விமான நிலையம் வந்தபோது சிக்கிக்கொண்டாா்.

இதையடுத்து சுகாதாரத் துறையினா் அவருக்குக் கரோனா தீநுண்மி தடுப்பு கவச உடைகளை அணிவித்து, தனி சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா்.

அத்தோடு அந்த மாணவா் வந்து நின்ற இடம், விமான கவுண்டா், அப்பகுதி முழுவதும் சுகாதாரத் துறையினா் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினா். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.