தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

By

Published : Sep 4, 2022, 12:21 PM IST

ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து கல்வியாளர் சங்கமம் நடத்தும் ஆசிரியர்களுடன் அன்பில், நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சி கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் “ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்” என்ற நிகழ்ச்சி தனியார் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அன்பில் மகேஷ், ”பெரம்பலூர் மாவட்டம் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்துள்ளது. மற்ற மாவட்டங்கள், ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. அதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாவட்ட நிகழ்விலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ”ஆசிரியர் மனசு” என்ற புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இணையதளங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் ஆசிரியர்கள் மற்றும் தங்களது குறைகளை தெரிவித்து வருகின்றனர். ஒரே மாதிரியாக உள்ள பொதுக்குறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற குறைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

அதன்பின் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களையும் நினைவு பரிசுகளையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெரம்பலூர் மாவட்டம் தருவதை போல மற்ற மாவட்டங்களும் இதேபோல தேர்ச்சி முடிவுகளை தரும் நோக்குடன் செயல்பட வேண்டும். தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் எப்போதும் தன்னம்பிக்கையை இழக்க கூடாது. மதிப்பெண்கள் - ஒருவரை மதிப்பீடு செய்யாது. அதற்காகத் தான் தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாணவர்கள் மனவலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - நடிகர் ஆர்யா அட்வைஸ்

ABOUT THE AUTHOR

...view details