தமிழ்நாடு

tamil nadu

நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார்!

By

Published : Apr 6, 2022, 10:49 PM IST

திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார்!
திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானாதிரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார்!ர்! ()

நாமக்கல் மாவட்டம் அல்லிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தனசேகரன் என்ற தமிழ் காமெடி நடிகர் திடீரென மாரடைப்பால் காலமானார்.

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள, அல்லிநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான்.

சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 3 அடி உயரம் கொண்ட இவர் ஐம்புலன், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

மேலும் இவர், கிராமங்கள் தோறும் கோயில் திருவிழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு பள்ளிபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பினார்.

இரவில் தூங்கச் சென்ற அவர் காலையில் மீண்டும் எழுந்திருக்கவில்லை. உறவினர்கள் அவரை மீட்டு உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வெளியானது சன்னி லியோன் தமிழ்ப்பட போஸ்டர்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details