தமிழ்நாடு

tamil nadu

மாயமான மாணவி மாலையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

By

Published : Sep 20, 2021, 8:06 PM IST

மாணவி ஸ்வேதா

நாமக்கல்லில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவி ஒருவர் காணாமல் போன நிலையில், அந்த மாணவி திருமணம் செய்துகொண்டு தேனி காவல் நிலையில் ஆஜர் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாமக்கல்: ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா. இவர் ஏற்கெனவே ஒருமுறை நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிப் பெறவில்லை. இதனால், இரண்டாவது முறையாக இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வையும் எழுதியுள்ளார்.

இதையடுத்து, ஸ்வேதா தனது தோழி வீட்டிற்கு செல்வதாகக் கூறி, மூன்று நாள்களுக்கு முன்பு கிளம்பி, வீட்டுக்குத் திரும்பவில்லை எனத் தெரிகிறது. அம்மாணவியின் பெற்றோர் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நீட் தேர்வு அச்சத்தால் மாணவி காணாமல் போயிருப்பார் என்ற சந்தேகம் எழுந்தது.

சிசிடிவியில் சிக்கினார்

பெற்றோர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மாணவி ஸ்வேதாவின் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், ஸ்வேதா ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறிச்சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், ஸ்வேதா தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் காவல் நிலையத்தில் அவரின் காதலருடன் தஞ்சமடைந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த டேனியல் என்பவருடன் ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும், தேனியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. நாமக்கல்லில் தங்களை காவல் துறையினர் தேடி வருவதை அறிந்த இந்த ஜோடி, தேனியில் தற்போது காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தீர்ந்தது பெற்றோரின் வேதனை; அரசுப் பள்ளி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் ஸ்டாலின்'

ABOUT THE AUTHOR

...view details