தமிழ்நாடு

tamil nadu

சரியும் முட்டை விலை

By

Published : Aug 9, 2021, 10:38 AM IST

falling-egg-prices

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் சத்துணவிற்கும், தமிழ்நாடு, கேரளா ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும் அனுப்பி வைக்க்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று(ஆக.09) முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையினை 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சரியும் முட்டை விலை

இதுகுறித்து, பண்ணையாளர்கள் கூறுகையில், கரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் முட்டை விலை சரிந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: நீருக்குள் விஜய் ஓவியம் - கல்லூரி மாணவர் சாதனை

ABOUT THE AUTHOR

...view details