தமிழ்நாடு

tamil nadu

பழைய முறைப்படி முட்டை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மனு

By

Published : Feb 18, 2020, 4:47 PM IST

நாமக்கல்: பழைய முறைப்படி முட்டை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோழிப் பண்ணையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோழிப்பண்ணையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோழிப்பண்ணையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாமக்கல் மண்டலத்தில் தினசரி நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. முட்டை விற்பனை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்துவந்தது.

இக்குழுவினர் 2019ஆம் ஆண்டுவரை வாரத்தில் மூன்று நாள்கள் முட்டை விலை நிர்ணயம் செய்துவந்தனர். பின்னர் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி ஆறாம் தேதி கோழிப்பண்ணையாளர்கள் நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோழிப்பண்ணையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இதனைத் தொடர்ந்து விலை நிர்ணய குழுவில் நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோல் தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்வதை கைவிட்டு வாரத்தில் மூன்று நாள்களுக்கு முட்டை விலை நிர்ணயம் செய்திடவும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க: நாமக்கலில் முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் சரிவு

ABOUT THE AUTHOR

...view details