தமிழ்நாடு

tamil nadu

வயில்வெளி வழியே இடுகாட்டுக்கு பயணம்... கடும் சிரமத்தில் கொற்றவநல்லூர் மக்கள்

By

Published : Sep 20, 2021, 8:36 AM IST

உயிரிழந்தோர் உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்வது தொடர்பான காணொலி

மயிலாடுதுறை அருகே உயிரிழந்தவர்களின் உடலை வயல்வெளி வழியே தூக்கிச் செல்லும் நிலை இருப்பதால், இடுகாட்டுச் சாலை அமைத்து தருமாறு அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை: நீடூர் ஊராட்சிக்கு உள்பட்ட கொற்றவநல்லூர் கிராமத்தில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் வசிப்போரில் உயிரிழப்போரின் உடலை, சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு தள்ளி ஆனந்ததாண்டவபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள இடுகாட்டில் தகனம் செய்வது வழக்கமாக உள்ளது.

இந்த இடுகாட்டுக்குச் செல்லும் பாதை பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், உயிரிழந்தவர்களின் உடலை வயல்வெளி வழியாகக் கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தோர் உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்வது தொடர்பான காணொலி

ஆகையால் மழை, வெள்ளம், அறுவடை காலங்களில் உயிரிழந்தோர் உடலை இப்பகுதி வழியே கொண்டு செல்வதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக இடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைகாலம் தொடங்குவதற்கு முன்னதாக சாலை வசதியை ஏற்படுத்தித்தரக்கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:விவசாய நிலத்தில் பாதாள சாக்கடை திட்டம் - 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details