தமிழ்நாடு

tamil nadu

சீர்காழியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை!

By

Published : Aug 11, 2023, 12:10 PM IST

சீர்காழி அருகே ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

sucide
மதுவில் விஷம் கலந்து குடித்த ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொடக்கார மூலை கிராமத்தைச் சேர்ந்தவர், ஆனந்த் (39). இவர் மயிலாடுதுறை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவருக்குத் திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதனிடையே ஆனந்துக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்திற்கும், அவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும், இதனால் கோபப்பட்டுக்கொண்டு, குழந்தைகளுடன் கொள்ளிடம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஆனந்த் மீண்டும் வீட்டிற்கு வருமாறு தனது மனைவிக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அவர் மனைவி வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த ஆனந்த், அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில், மதுவாங்கி அதில் விஷம் கலந்து அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

மேலும், ஆனந்த் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள், பதறிப்போய் ஆனந்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இது குறித்து கொள்ளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல...

இதன் முன்னதாக, கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் (45) பந்தய சாலைப் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். விஜயகுமார், கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சிபெற்று காவல் துறையில் இணைந்தார்.

மேலும், திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். அதனைத்தொடர்ந்து இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி கோவை சரக காவல் துறை துணைத் தலைவராக பொறுப்பேற்று பணிபுரிந்தார்.

இந்நிலையில், நடைப்பயிற்சி முடித்துவிட்டு பந்தய சாலையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர், அவருடைய மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் கைத் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு, தனது அறைக்குள் சென்றார். பின் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒரு வழியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details