தமிழ்நாடு

tamil nadu

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு

By

Published : Sep 30, 2020, 1:22 AM IST

முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு

மதுரை: காமராஜர் பல்கலைக்கழகம், வேலம்மாள் மருத்துவ கல்லூரி இணைந்து முதுகலை நுண்ணுயிர் மருத்துவப் படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் காமராஜர் பல்கலைக்கழகம், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி இணைந்து முதுகலை நுண்ணுயிர் மருத்துவப் படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம் காமராஜர் பல்கலைக்கழகத்திலிருந்து 20 மாணவர்கள், வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுகலை பயோமெடிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பினை படிக்கவுள்ளனர்.

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை பயன்படுத்தவுள்ளனர்.

முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு

இந்நிகழ்ச்சியில் காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் வசந்தா, துணைவேந்தர் கிருஷ்ணன், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தாளாளர் முத்துராமலிங்கம், பேராசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்ததாவது, "காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் மூலம் வேலம்மாள் மருத்துவக் கல்லூரியுடன் முதுகலை நுண்ணுயிர் மருத்துவப் படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: அரியர் ஆல்-பாஸ் பண்ணவச்சதுக்கு நன்றி ஐயா!

ABOUT THE AUTHOR

...view details