தமிழ்நாடு

tamil nadu

சானமாவு வனபகுதியில் மேலும் 15 காட்டு யானைகள் இடம்பெயர்வு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

By

Published : Jan 18, 2023, 1:49 PM IST

சானமாவு வனப்பகுதியில் 65 காட்டு யானைகள் இடம்பெயர்வு: வனத்துறையினர் எச்சரிக்கை

சானமாவு வனப்பகுதிக்கு மேலும் 15 காட்டு யானைகள் இடம்பெயர்ந்துள்ளது. மொத்தம் 65 காட்டு யானைகள் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சானமாவு வனப்பகுதியில் 65 காட்டு யானைகள் இடம்பெயர்வு: வனத்துறையினர் எச்சரிக்கை

கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 200-க்கும் அதிகமான காட்டுயானைகள் அக்டோபர் மாத இறுதியில் ஜவளகிரி வனப்பகுதி வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளது. தேன்கனிக்கோட்டை, நொகனூர், தளி, ஜவளகிரி ஆகிய வனப்பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன.

ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 2 குழுக்களாக 50 காட்டுயானைகள் முகாமிட்டுள்ள நிலையில், இன்று விடியற்காலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து மேலும் 15 காட்டுயானைகள் ஊடேதுர்க்கம் வழியாக சானமாவு வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்துள்ளன.

இதனால் அப்பகுதியில் மொத்தமாக 65 காட்டுயானைகள் உள்ளன. இவற்றை ரேஞ்சர் ரவி தலைமையிலான 10-க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர் கண்காணித்தும், சானமாவு வனப்பகுதி ஒட்டிய பீர்ஜேப்பள்ளி, பாத்தக்கோட்டா, ராமாபுரம், ஆழியாளம் உள்ளிட்ட கிராம மக்கள் மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல இரவு நேர விளைநில காவலுக்கு செல்ல வேண்டாமென என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி பயணம்

ABOUT THE AUTHOR

...view details