தமிழ்நாடு

tamil nadu

கன்னியாகுமரியில் ஆண் யானை உயிரிழப்பால் சோகம்

By

Published : Jul 12, 2021, 4:52 PM IST

கன்னியாகுமரியில் ஆண் யானை உயிரிழப்பால் சோகம்

கீரிப்பாறை வனப்பகுதியில் யானைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி: கீரிப்பாறை வனப்பகுதி அருகே தனியாருக்குச் சொந்தமான கிராம்பு எஸ்டேட்டில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இன்று (ஜூலை 12) இறந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மோதலின் காரணமாக உயிரிழப்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனத் துறையினர், யானையின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் வன கால்நடை மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் நடத்திய உடற்கூராய்வில், யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால்தான் யானை உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் யானையின் உடல் பாகங்களில் சில பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

வனவிலங்கு ஆர்வலர்கள் சோகம்

இதனையடுத்து யானையின் உடல் அதே வனப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் நோய்வாய்ப்பட்டு ஒரு யானை உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு யானை உயிரிழந்திருப்பது வன விலங்கு ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:மலை ரயில் சேவைக்காக தயாராகும் விலையுயர்ந்த உள்நாட்டு நிலக்கரி நீராவி இன்ஜின்!

ABOUT THE AUTHOR

...view details