தமிழ்நாடு

tamil nadu

தீபாவளி விடுமுறை: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி - குவிந்த சுற்றுலாப்பயணிகள்

By

Published : Oct 24, 2022, 3:11 PM IST

தீபாவளி விடுமுறையையொட்டி, குமரியில் திற்பரப்பு அருவியில் 7 நாட்களுக்குப் பிறகு இன்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

கன்னியாகுமரி:கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதியிலிருந்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மாவட்டத்தில் பெய்த மழை குறைவானதை அடுத்து, நேற்று பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து திற்பரப்பு அருவியில் 7 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, அருவியின் ஒரு பகுதியில் இன்று (அக்.24) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதியளித்தது.

இதைத்தொடர்ந்து தீபாவளி விடுமுறையையொட்டி, அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். எனினும், அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதைத் தொடர்ந்து, முக்கியப்பகுதிகளில் குளிக்கத்தொடர்ந்து தடை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி விடுமுறை: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி - குவிந்த சுற்றுலாப்பயணிகள்

இதையும் படிங்க: தீபாவளி நாளில் பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details