தமிழ்நாடு

tamil nadu

குவைத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி; ஏஜெண்டு வீட்டின் முன்பு தர்ணா...

By

Published : Oct 5, 2022, 8:56 PM IST

குவைத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி; ஏஜெண்டு வீட்டின் முன்பு தர்ணா...

குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் பணம் பெற்று காலாவதியான விசாவை கொடுத்து குவைத்துக்கு ஆட்ளை அனுப்பிய ஏஜண்டு வீட்டின் முன்பு இளைஞர்களின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி: அருமநல்லூர் அருகே ஞாலம் பகுதியில் வசிப்பவர்கள் மனோஜ் பிரபாகர், மற்றும் அவரது உறவினர் ஜெகன் பிரேம் ஆகியோரிடம் குமரி மாவட்டத்தை சேர்ந்த வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டுகளான அனுஷியா மற்றும் அவரது கணவர் சுபாஷ் ஆகியோர் தொடர்பு கொண்டனர்.

குவைத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 2 லட்சம் வீதம் இருவரிடம் நான்கு லட்சம் பெற்று குவைத்திற்கு மனோஜ் பிரபாகர் மற்றும் ஜெகன் பிரேம் ஆகிய இரு வாலிபர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சென்ற இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு இவர்கள் எதிர்பார்த்து சென்ற வேலையும் இல்லை மற்றும் இவர்களின் விசா காலாவதி ஆனதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து இவர்கள் போலீசுக்கு பயந்து வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இதை அறிந்த இவர்களின் உறவினர்கள் பணம் பெற்று ஏமாற்றிய ஏஜெண்டுகள் மீது எஸ்பி அலுவலகத்திலும், பூதப்பாண்டி போலீசிலும் புகார் செய்தனர்.

இது குறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இன்று ஞாலம் பகுதியில் உள்ள ஏஜெண்ட் சுபாஷ் வீட்டின் முன்பு வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தங்கள் உறவினர்களை குவைத்துக்கு அனுப்ப பெற்றுக்கொண்ட ரூபாயை திருப்பித் தர வேண்டும், இந்த ரூபாயை வைத்து தான் அங்கு சிக்கி தவிக்கும் தனது உறவினர்களை மீட்க முடியும், எனவே ரூபாயை தர வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குவைத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி; ஏஜெண்டு வீட்டின் முன்பு தர்ணா...

இதையும் படிங்க:காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட கட்டடத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளி!

ABOUT THE AUTHOR

...view details