தமிழ்நாடு

tamil nadu

13.5 டன் லாரியை கயிறு கட்டி இழுத்து இளைஞர் சாதனை

By

Published : Sep 18, 2022, 8:36 PM IST

Etv Bharat13.5 டன் லாரியை கயிறு கட்டி இழுத்து கன்னியாகுமரி இளைஞர் சாதனை
Etv Bharat13.5 டன் லாரியை கயிறு கட்டி இழுத்து கன்னியாகுமரி இளைஞர் சாதனை ()

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 13.5 டன் லாரியை கயிற்றால் கட்டி 111 மீட்டர் தூரத்தை 4 நிமிடத்தில் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

கன்னியாகுமரி:நாகர்கோவில் அருகே ஸ்டராங் மேன் கண்ணன் என்ற இளைஞர் 13.5 டன் லாரியை கயிற்றால் கட்டி 111 மீட்டர் தூரத்தை 4 நிமிடத்தில் இழுத்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்உ பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் சாதனை புரிந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கு எங்களைப் போன்றவர்களுக்கு அரசு ஊக்கப்படுத்த முன் வர வேண்டும் கோரிக்கை விடுத்தது உள்ளார்.

ஐரோப்பியர்கள் மட்டுமே இது போன்று சாதனை செய்துள்ளதாகவும், இந்தியாவில் இவர் தான் முதல் சாதனை என சோழன் புக் ஆப் சாதனை நிறுவனத்தார் தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்து தோவாளை அருகே சோழன் புக் ஆப் உலக சாதனை நிகழ்ச்சி இன்று(செப்-18) நடைபெற்றது. இதில் நாகர்கோவில் அருகே உள்ள தாமரைக் குட்டிவிளையை சேர்ந்த ஸ்டராங் மேன் கண்ணன் என்ற சாதனையாளர் பங்கேற்றார். சோழன் புக் ஆப் நிறுவனத்தார் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில் அவர் குறிப்பிட்ட நேரத்தில் சாதனை புரிந்து வெற்றி அடைந்தார்.

14 டயர்களைக் கொண்ட 13.50 டன் எடை கொண்ட லாரியை கயிறு கட்டி இழுத்து 111 மீட்டர் தூரத்தை 4 நிமிடத்தில் இழுத்து உலக சாதனை புரிந்தார். அவருடைய சாதனைக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்தனர். கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து சாதனையாளர் கண்ணன் கூறுகையில், ‘ஏற்கனவே 9:30 டன் எடை கொண்ட லாரியை 90 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டி இழுத்து சாதனை புரிந்துள்ளேன் அதன் பின்பு உத்திரகாண்டிலும் பஞ்சாபிலும் சென்று இதுபோன்று வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் சாதனை புரிந்துள்ளேன். அடுத்த உலக சாதனை நிகழ்சி விரைவில் கல்கத்தாவில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் கல்கத்தா சாதனை நிகழ்ச்சியில் நான் பங்கேற்க தயாராகி வருகிறேன் எனக் கூறினார். சர்வதேச அளவில் நாங்கள் சாதனை புரிந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு எங்களைப் போன்ற சாதனையாளர்களை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் விடுவித்தார்.

13.5 டன் லாரியை கயிறு கட்டி இழுத்து கன்னியாகுமரி இளைஞர் சாதனை

இது குறித்து சோழன் புக் ஆப் சாதனை நிறுவனத்தார் கூறுகையில், ‘உலக அளவில் இதுபோன்ற சாதனை நிகழ்வுகளை ஐரோப்பியர்கள் மட்டுமே புரிந்துள்ளார்கள் அதுவும் இரு புறம் கயிறு கட்டி கயிறை பிடித்து அதன் துணையுடன் சாதனை புரிந்துள்ளார்கள் இங்கே கயிறு துணை இன்றி லாரியில் கட்டுவதற்கு மட்டுமே கயிறு பயன்படுத்தப்பட்டு தன்னிச்சையாக சுய பலத்தில் சாதனை புரிவது உலக அளவில் முதல் நிலையில் உள்ளது என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கர்ப்பிணிகள் முதல் 16 வயதுடையோர் வரை வாரந்தோறும் புதன்கிழமை தடுப்பூசி

ABOUT THE AUTHOR

...view details