தமிழ்நாடு

tamil nadu

நாகர்கோவிலில் மத நல்லிணக்கத்துடன் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி

By

Published : Sep 18, 2022, 8:41 PM IST

Etv Bharat

நாகர்கோவிலில் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி மற்றும் போதை ஒழிப்பு வாழ்வியல் முறை, அறிவியல் வழிமுறைகள் கொண்ட கண்காட்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி:பப்ஜி, ப்ரீ ஃபயர் போன்ற கேம்களில் ஈடுபடுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி மற்றும் போதை ஒழிப்பு குறித்து நடந்த வாழ்வியல் முறை அறிவியல் வழிமுறைகள் கண்காட்சியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் தனியார் மண்டபத்தில் இன்று (செப்.18) நடைபெற்ற இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சியை சாமிதோப்பு அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் உட்பட கிறிஸ்தவ இஸ்லாமிய மத போதகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இக்கண்காட்சியில் இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளையும் அதில் உள்ள அறிவியல் பூர்வமான வசனங்களையும் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக படங்கள் மற்றும் காட்சி பொருட்கள் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டன.

மேலும், போதை விழிப்புணர்வு தொடர்பாக சமுதாயத்தில் போதை பொருட்களால் ஏற்படும் பிரச்னைகள், அதனால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகள் மற்றும் வரதட்சணை கொடுமை குறித்தும் விளக்கப்பட்டன. அதேபோன்று பப்ஜி, ப்ரீ பயர் போன்ற வீடியோ கேம் விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகளை வீடியோ காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.

போதை ஒழிப்பு வாழ்வியல் முறை அறிவியல் வழிமுறைகள் கொண்ட கண்காட்சி

நேற்றும் இன்றும் என இரண்டு நாள்கள் நடந்துகொண்டிருக்கும் இக்கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: காலை உணவுத்திட்டம் முதலமைச்சரின் பேரன் அமர்ந்து உண்ணும் அளவிற்கு தரமானதாக இருக்குமா?: சீமான்

ABOUT THE AUTHOR

...view details