தமிழ்நாடு

tamil nadu

கழிவுநீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் புதிய கண்டுபிடிப்பு அறிமுகம்!

By

Published : Dec 6, 2019, 7:48 PM IST

கன்னியாகுமரி: கழிவுநீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் புதிய கண்டுபிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. உயிரி எரிபொருளை பயன்படுத்தும்போது வெளிநாடுகளிலிருந்து எரிபொருள்கள் இறக்குமதி செய்வதை குறைக்க முடியும்.

biogas
biogas

உலகினை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, புவி வெப்பமயமாதலைத் தடுக்க, இயற்கையை பாதுகாக்க என பல்வேறு பயன்களைத் தரும் புதிய கண்டுபிடிப்பான கழிவுநீரிலிருந்து உயிரி எரிபொருள் தயாரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கழிவுநீரிலிருந்து உயிரி எரிபொருள் தயாரிக்கும் திட்டம், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, இந்திய அரசின் கூட்டு முயற்சியால் நாகர்கோவில் அடுத்து உள்ள பேயோடு கிராமத்தில் இன்று தொடங்கப்பட்டது.

கழிவுநீரிலிருந்து உயிரி எரிபொருள் தயாரிக்கும் திட்டம்

தற்போது அமைக்கப்பட்டு இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 250 லிட்டர் உயிரி எரிபொருள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் இதன்மூலம் இருசக்கர, நான்கு சக்கர வாகனம் இயக்க முடியும்.

ஒரு ஆண்டுக்கு இந்தியா வெளிநாடுகளிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்துவருகிறது. ஆகவே இதுபோன்ற கழிவுநீர் எரிபொருள் உற்பத்தி பல இடங்களில் கொண்டுவரும்போது, இந்தியா எரிபொருளில் தன்னிறைவு அடைய முடியும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் 100 மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details