தமிழ்நாடு

tamil nadu

மெட்ரோ குடிநீர் முதலமைச்சர் அனுமதியுடன் வழங்கப்படும்.. அமைச்சர் கே.என்.நேரு

By

Published : Aug 18, 2022, 9:57 PM IST

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மெட்ரோ குடிநீர் முதலமைச்சர் அனுமதியுடன் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

காஞ்சிபுரம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இன்று (ஆக.18) நடந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் நகராட்சி நிர்வாகத் துறையின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, 'செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு வரும் மெட்ரோ நீர் திட்டத்தை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த முதலமைச்சரின் அனுமதி பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. கழிவுநீர் கொண்டு செல்லும் லாரி பொதுவெளியில் கழிவுநீரை வெளியிடுவதைத் தடுக்க, கழிவுநீர் லாரிக்கு ஜிபிஎஸ் கருவிப் பொருத்தி முழுமையாகக் கண்காணிக்கப்படுவதற்குப் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றது குறித்து அதிகாரியிடம் விசாரணை நடக்கிகிறது முழு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர்களின் பகுதியிலுள்ள குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏக்கள் க.கந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, கருனாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் 9 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details