தமிழ்நாடு

tamil nadu

தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து விவசாயிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் - ரிஷிவந்தியம் எம்எல்ஏ அறிவிப்பு

By

Published : Jan 18, 2021, 3:23 PM IST

கள்ளக்குறிச்சி: தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை ஒரு வாரத்திற்குள் வழங்காவிட்டால் விவசாயிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ''கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய சுமார் 84 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது.

அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டு வைக்கப்பட்ட பயிர் யார் வெட்டுவது, எந்த ஆலைக்கு அனுப்புவது என்று தெரியாமல் விவசாயிகளின் பயிர் விளைந்து காய்ந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட விவசாயிகள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு

அதுமட்டுமின்றி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் நானும் இரண்டு முறை மனு அளித்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இன்னும் ஒரு வாரத்திற்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கவிட்டால் விவசாயிகளை திரட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:கேத்தாண்டப்பட்டியிலுள்ள கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details