தமிழ்நாடு

tamil nadu

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு: பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையீடு

By

Published : Sep 16, 2022, 1:11 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்ய வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர்,செயலாளர், முதல்வர் மற்றும் இரண்டு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம் தலைமையில், 70-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல. "மாணவி தற்கொலை" தான் செய்து கொண்டார் என்று நீதிபதி தனது விரிவான உத்தரவில் தெரிவித்துள்ளார்.

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நீதிபதி தெரிவித்துள்ள இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தின் சட்ட விதிகளை மீறிய செயலாகவே உள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த 2000 ஆம் ஆண்டு மேலவளவு வழக்கில் இதேபோன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வு விசாரித்ததாக மேற்கோள் காட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையிட்டார். வேறொரு நாளில் முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீபத்தில் குறைந்துவிட்டது! - வேதனை தெரிவித்த நீதிபதிகள்

ABOUT THE AUTHOR

...view details