தமிழ்நாடு

tamil nadu

390 வாக்குசாவடிகள் பதற்றமானாவை - கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

By

Published : Sep 14, 2021, 8:54 PM IST

கள்ளக்குறிச்சி ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் 390 வாக்குசாவடிகள் பதற்றமானாவையாக கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி: ஊரக, உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப். 14) நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், திட்ட இயக்குநர் மணி, மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு மாலதி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காவல் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அலுவலர்களுக்கு பயிற்சி

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கூறுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நாளை (செப். 15) முதல் பணியாற்றுவார்கள். மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 10 ஆயிரத்து 384 வாக்குப்பதிவு அலுவலர்களின் விவரங்கள் சேகரிப்பட்டு உள்ளது. அந்த பணி இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கூடுதல் கண்காணிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 390 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த 390 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கள்ளக்குறிச்சியில் 21 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 549 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், தகவல்களை தெரிவிப்பதற்காக 1800-425-8510 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முட்டை ஓடு முதல் இசைக்கருவி வரை விநாயகர் உருவம்... அசத்தும் கள்ளக்குறிச்சி கலைஞர்!

ABOUT THE AUTHOR

...view details