தமிழ்நாடு

tamil nadu

சிறுமிக்குப்பாலியல் தொல்லை - கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

By

Published : Oct 14, 2022, 9:57 PM IST

ஈரோடு மாவட்டத்தில் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தத விவகாரத்தில், செந்தில் குமார் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை- கூலி தொழிலாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!
சிறுமிக்கு பாலியல் தொல்லை- கூலி தொழிலாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

ஈரோடுமாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கூலித்தொழிலாளி ஆவார். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் செந்தில்குமார் நைசாக பேச்சுவார்த்தை கொடுத்து, அந்த சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்தச்சிறுமியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கூலி வேலை செய்யும் செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி இன்று(அக்.14) தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5ஆயிரம் அபாரதம் விதித்து தீர்ப்பளித்தார்.

சிறுமிக்குப்பாலியல் தொல்லை - கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அபராதத்தைக் கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.2 லட்சம் நிவாரணத்தொகையாக வழங்க வேண்டும் எனப்பரிந்துரை செய்தார். மேலும் இந்த இழப்பீட்டுத்தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க:படிக்கச்சொல்லி வற்புறுத்தியதால் தாயைக்கொன்ற 14 வயது மகன்; சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

ABOUT THE AUTHOR

...view details