தமிழ்நாடு

tamil nadu

4 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிப்பு!

By

Published : Aug 17, 2021, 11:03 PM IST

பங்களாபுதூர் காவல் நிலையத்தில் 115 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 4 ஆயிரம் மதுபாட்டில்களை காவல் துறையினர் அழித்தனர்.

liquor bottles  liquor  four thousand liquor bottles were destroyed by police  liquor bottles were destroyed by police  erode liquor bottles were destroyed by police  erode news  erode latest news  ஈரோடு செய்திகள்  மதுபாட்டில்கள் அழிப்பு  காவல் துறையினர் அதிரடி  காவல் துறை  ஈரோட்டில் மதுபாட்டில்கள் அழிப்பு
மதுபாட்டில்கள் அழிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர், கடம்பூர் காவல்நிலைய பகுதியில் கடந்த மூன்று மாதத்தில் தமிழ்நாடு மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்ததாக 90 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மேலும் கர்நாடக மதுபான பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 25 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 ஆயிரம் மதுபாட்டில்கள், மதுபான பாக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அழிக்கப்பட்ட மது பாட்டில்கள்

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், மதுபான பாக்கெட்டுகளை இன்று (ஆக 17) பங்களாபுதூர் காவல் நிலையத்தின் அருகே காலி இடத்தில் 10 அடி ஆழத்திற்கு பொக்லைன் வாகனம் மூலம் குழியை வெட்டி, அதில் புதைத்தனர்.

இவை கோபிசெட்டிபாளையம் கோட்ட கலால் அலுவலர், ஷீலா முன்னிலையில் நடைப்பெற்றது.

இதையும் படிங்க: காலில் விழுந்த விவகாரம்: கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details