தமிழ்நாடு

tamil nadu

ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளைப் பராமரிக்க வேண்டும் என தாண்டிக்குடி மக்கள் கோரிக்கை

By

Published : Sep 14, 2022, 3:53 PM IST

ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகள் பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் ஆதி மனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொல்லியல் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் விவசாயமே பிரதானத்தொழிலாகவும் செய்து வருகின்றனர். தொடர்ந்து இந்தப் பகுதி மட்டுமின்றி அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன. இதில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த பழங்கால கற்திட்டைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன..

மேலும் பழங்கால நினைவுச்சின்னங்கள் அழியும் சூழலும் ஏற்பட்டு வருகிறது. மேலும் பலமுறை தொல்லியல் துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு அழைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, பழங்கால நினைவுச்சின்னங்களைப் பராமரித்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளைப் பராமரிக்க வேண்டும் என தாண்டிக்குடி மக்கள் கோரிக்கை

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details