தமிழ்நாடு

tamil nadu

குழந்தை வேலப்பர் கோயிலில் ஓபிஆர் தரிசனம்!

By

Published : Sep 4, 2020, 6:22 PM IST

திண்டுக்கல்: கொடைக்கான‌ல் குழ‌ந்தை வேல‌ப்ப‌ர் திருக்கோயிலில் தேனி மக்களவை உறுப்பினரும், துணை முத‌ல‌மைச்ச‌ர் ப‌ன்னீர்செல்வ‌த்தின் ம‌க‌னுமான ர‌வீந்திரநாத் குமார் சாமி த‌ரிச‌ன‌ம்செய்தார்.

opr
opr

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லுக்கு ர‌வீந்திர‌நாத் குமார் வந்திருந்தார். கொடைக்கானலிலிருந்து மேல்ம‌லை கிராம‌மான‌ பூம்பாறையில் உள்ள‌ புக‌ழ்பெற்ற‌ குழ‌ந்தை வேல‌ப்ப‌ர் திருக்கோயிலில் சாமி த‌ரிச‌ன‌ம்செய்தார்.

தொட‌ர்ந்து க‌ட்சி நிர்வாகிக‌ளிட‌ம் சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோச‌னை மேற்கொண்டார்.

கோயிலுக்கு எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் அதிமுகவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்தனர். மேலும் அவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாக ரவீந்திரநாத்திற்காக காத்திருந்தது சர்ச்சையாகியுள்ளது.

முன்னதாக ஊரடங்கு காலத்தில் அரசின் தடையை மீறி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சாமி தரிசனம்செய்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: கண்டம் இருப்பதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய ஜோசியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details