தமிழ்நாடு

tamil nadu

கவிழ்ந்த லாரி; நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு - அள்ளிச்சென்ற மக்கள்

By

Published : Dec 6, 2022, 3:25 PM IST

கார் மோதியதில் கவிழ்ந்த லாரி ; பெண் உட்பட 100 வாத்துகள் உயிரிழப்பு!

வத்தலக்குண்டு - செம்பட்டி நெடுஞ்சாலையில் லாரி மீது கார் உரசியதில் பள்ளத்தில் கவிழ்ந்து லாரி விபத்திற்குள்ளானது. இதில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகள் பரிதாபமாக உயிரிழந்தன.

திண்டுக்கல்:சபரிமலையில் இருந்து சென்னை செல்வதற்காக வந்து கொண்டிருந்த காரும் மற்றொரு லாரியும் இன்று(டிச.6) காலை சுமார் 10 மணி அளவில் வத்தலக்குண்டு - செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.

அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த கார், முன்னால் போய்கொண்டிருந்த லாரி மீது உரசியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்தன.

மேலும், லாரியில் பயணித்த குளித்தலையைச் சேர்ந்த வாசு என்பவரின் மனைவி மேரி(35) படுகாயம் அடைந்தார். காரில் பயணித்தவர்கள் எவ்வித காயமும் இன்றி உயிர்த்தப்பினர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல் துறையினர், காயமடைந்த மேரியை அவசர ஊர்தி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், விபத்தில் இறந்து போன வாத்துகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மாடுகளை திருட வந்த கேரள இளைஞர் - தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details