தமிழ்நாடு

tamil nadu

மச்சினிச்சியை திருட்டுத்தனமாக மணந்த கணவர்.. மனைவி எடுத்த அதிரடி முடிவு!

By

Published : Nov 22, 2022, 3:51 PM IST

மச்சினிச்சியை மணந்த கணவர் மீது மனைவி புகார்
மச்சினிச்சியை மணந்த கணவர் மீது மனைவி புகார் ()

தங்கையை திருமணம் செய்து கொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளம்பெண் ஒருவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தருமபுரி: காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிபட்டியை சேர்ந்த சத்யா என்பவர், தனது கணவன் எனது தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

போச்சம்பள்ளி அடுத்த கொட்டாவூரைச் சேர்ந்தவர் பொண்ணுவேல் என்பவருடன் திருமணம் ஆகி கடந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. பொண்ணுவேல் ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பொண்ணுவேலுக்கும், சத்யாவின் தங்கை கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனிடையே சத்யா - பொன்னுவேல் இடையே அடிக்கடி சிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மே மாதம் பொண்ணுவேல், தனது மனைவி சத்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நான் கட்டிய தாலியை கழட்டி கொடுத்து விடு, நான் உன் தங்கைக்காக இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதற்கு நீ தடையாக இருக்கிறாய் என்று கூறி தகராறு செய்துள்ளார்.

ஏமாற்றிய கணவன் பொண்ணுவேல் மற்றும் தங்கை கவிதா

இதனையடுத்து கவிதாவிடம், பேசி திருமணம் செய்து கொள்ள அழைத்துச் சென்றுள்ளார். இதனால் மணமுடைந்த சத்யாவின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்பொழுது சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கவிதாவும் பொண்ணுவேலும், திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சத்யா தனது பெற்றோருடன் சேர்ந்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். ஆனால், காவல் நிலையத்திற்கு வந்த பொன்னுவேல் மற்றும் கவிதா இருவரும், தங்கள் இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி கையொப்பமிட்டு சென்றுள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த மனைவி சத்யா

இந்தநிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிபாளர் அலுவலகத்தில் புகார் அளித்த பிறகு சத்யா கூறியதாவது, “ தன்னை ஏமாற்றி தனக்கு தெரியாமல் தனது தங்கையை திருமணம் செய்து கொண்ட கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு காரியமங்கலம் காவல் நிலையத்தில் உரிய நீதி கிடைக்கவில்ல, எனக்கு ஒரு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.

இதையும் படிங்க:“குறைந்த விலையில் தங்கம்”... மோசடி தம்பதி போலீசில் சிக்கியது எப்படி.?

ABOUT THE AUTHOR

...view details