தமிழ்நாடு

tamil nadu

தண்ணீருக்காக இடம்பெயரும் யானைகளைத் துன்புறுத்தும் சுற்றுலாப் பயணிகள்!

By

Published : Apr 2, 2021, 12:26 PM IST

தர்மபுரி: ஒகேனக்கல் காட்டுப் பகுதி சாலையில் தண்ணீர் குடிக்க இடம்பெயரும் யானைகளைத் துன்புறுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இருக்க வனத் துறை வழிவகை செய்ய வேண்டுமென வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

elephants
elephants

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலையில் செங் கிணறு பண்ணப்பட்டி வனப்பகுதியில் யானைகள் சாலையைக் கடப்பது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் இப்பகுதியில் முகாமிட்டு தண்ணீர் குடிக்க இடம்பெயர்கின்றன.

மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை யானைகள் பென்னாகரம் ஒகேனக்கல் சாலையைக் கடக்கும்போது ஒகேனக்கல்லிலிருந்து பென்னாகரம் நோக்கிவரும் சுற்றுலாப் பயணிகள் யானை அருகே சென்று செல்பி எடுப்பது, யானைகள் மீது கற்களை வீசி எறிவதும் யானையைத் துன்புறுத்தி கத்தி கூச்சலிட்டுவருகின்றனர்.

யானைகளைத் துன்புறுத்தும் சுற்றுலாப் பயணிகள்

சாலையில் செல்லும் நபர்கள் அட்டகாசத்தில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளை எச்சரித்தால் அவர்கள் மீது சுற்றுலாப் பயணிகள் தாக்குதல் நடத்துகின்றனர். தர்மபுரி மாவட்ட வனத் துறை, காவல் துறை இணைந்து யானைகள் சாலையைக் கடக்கும் நேரத்தில் அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் யானைகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுத்து யானைகளைத் துன்புறுத்தாமல் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே விலங்குகள் நல ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க: புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details