தமிழ்நாடு

tamil nadu

இலங்கை மக்கள் போராட்டம் எதிரொலி - தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் தீவிர ரோந்து!

By

Published : May 13, 2022, 4:00 PM IST

இலங்கை மக்கள் போராட்டம் எதிரொலி - நடுக்கடலில் தீவிர ரோந்து பணி

இலங்கை மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்கு தேச விரோத சக்திகள் நுழைவதாக வந்த தகவலை அடுத்து, கடலோர பாதுகாப்புப் படையினர் நடுக்கடலில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதனைத்தடுக்க இலங்கை முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேசவிரோத சக்திகள் தமிழ்நாட்டில் ஊடுருவ வாய்ப்புள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஒரு வார காலமாக கடலோரப் பகுதிகளான புதுச்சேரி, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்டப் பல பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்ட கடலோர காவல் படையினர் இன்று தீவிரமாக நடுக்கடலில் ரோந்துப் பணியிலும் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம் ஆழ்கடலில் நிற்கக்கூடிய கப்பல்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே தூத்துக்குடி கடல் பகுதிகளில் இலங்கை சிறையிலிருந்து சிலர் தப்பி அகதிகளாக வந்துள்ள தகவலையடுத்து, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு கடலோர காவல் படையினர் இன்று தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இலங்கை வன்முறை - தமிழக கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி

ABOUT THE AUTHOR

...view details