தமிழ்நாடு

tamil nadu

‘காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட வேண்டாம்’

By

Published : Aug 23, 2021, 7:42 AM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வம்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மை நிலை அறியாமல் அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட வேண்டாம் என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர்: சுற்றுலா மாளிகையில் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின், வேளாண் துறையில் ஓர் புரட்சி செய்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக உழவர் நலத் துறைக்கு என நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் லாபம் பெறுகின்றன பல திட்டங்களை அறிவித்துள்ளார். இதனை அனைவரும் வரவேற்றுள்ளனர். இந்த வாய்ப்பு தந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் 500-க்கு மேற்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுள்ளன.

இதுவரை தமிழ்நாட்டில் மூன்று லட்சத்து 350 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படி குறுவை சாகுபடிக்கு காப்பீட்டுத் தொகை கட்ட கூற முடியும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

10, 20 நாள்களில் குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி தொடங்கிவிடும். எனவே இந்த நிலையில் குறுவைக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகச் சொல்வது. சம்பா பயிறுக்கான காப்பீட்டுத் தொகை விரைவில் அறிவிக்கப்படும்.

செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வம்

தேவையில்லாமல் உண்மைநிலை அறியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக விவசாய சங்கமும், அரசியல் கட்சிகளும் அறிக்கைகள் வெளியிட வேண்டாம்” என்றார்.

இதையும் படிங்க: மீனவர்கள் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடி - இணையமைச்சர் எல். முருகன்

ABOUT THE AUTHOR

...view details