தமிழ்நாடு

tamil nadu

'ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீர்வு' - அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Nov 17, 2021, 10:36 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்களால் அளிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி
செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள சுளேஸ்வரன்பட்டி, சமத்தூர், கோட்டூர், நெகமம் பகுதிகளில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கோயம்புத்தூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் மனுக்கள் பெற திட்டமிடப்பட்டு, 150க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ள முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையே இதற்குக் காரணம். உடனடியாக இந்த மனுக்கள் இரண்டு நாட்களில் துறை வாரியாக பிரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

மேலும் பெரிய நெகமம் பகுதியில் மின்சாரம், குடிநீர் வசதி, கழிவுநீர் கலப்பதை தடுத்தல் ஆகியவற்றுக்காக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகின்ற 22ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்க உள்ளார்” என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரான், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், நகர தலைவர் வடுகை பழனிச்சாமி, கே.வி.கே.சபரி கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் யுவராஜ் கன்னிமுத்து, நகர துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சொல்லாமல் சென்றதற்கு மன்னியுங்கள் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்

ABOUT THE AUTHOR

...view details