தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூனைகளுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பம்

வேலாண்டிபாளையம் அருகே வீட்டில் வளர்த்து வரும் பூனைகளுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூனை
பூனை

By

Published : Jan 2, 2022, 8:11 PM IST

நம்மில் பலரும் நாய், பூனை போன்ற பிராணிகளைச் செல்லமாக வீடுகளில் வளர்த்து வருகிறோம். காலையில் எழுந்து விளையாடுவது முதல் இரவு தூங்கும் வரை மனிதர்களின் கால்களை மட்டுமே சுற்றித் திரிவதால் அவற்றை வீட்டில் ஒரு நபர்போல் மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதுபோன்ற நிகழ்வு தான் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உமா மகேஸ்வரர் - சுபா தம்பதி. இவர்கள் ப்ரிஸியன் வகையைச் சேர்ந்த இரண்டு பூனைகளை வளர்த்துவருகின்றனர்.

பூனைகளுக்கு வளைகாப்பு

இரண்டு பூனைகளுக்கும் இன்று (டிசம்பர் 2) அந்த உமாமகேஸ்வரர் குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தியுள்ளனர். ஜிரா, அரிசி எனப்பெயர் வைக்கப்பட்டுள்ள பூனைகளுக்கு செல்லப்பிராணிகளுக்கான ஒரு தனியார் மருத்துவமனையில் வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

பூனைகளுக்கு வளைகாப்பு

இந்த வளைகாப்பில் பூனைக்கு கறுப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் அணிவிக்கப்பட்டு தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பிஸ்கெட், பழங்கள் ஆகியவை சுவைக்க கொடுக்கப்பட்டன.

இதையும் படிங்க:கொஞ்சம் சேட்டை... நிறைய நட்பு...

ABOUT THE AUTHOR

...view details