நாயும், பூனையும் நட்பாக பழகி வரும் வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் ’தி ஃபீல் குட் பேஜ்’ என்ற பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அழகிய வெண் மேக நிறத்தில் காட்சியளிக்கும் குட்டி பூனை அதனுடைய நண்பனான நாய் ஒன்றுடன் படுசேட்டையில் ஈடுபடுகிறது. இவர்கள் இருவரும் மாறி மாறி அன்பை பொழிந்து கொள்வது பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.