தமிழ்நாடு

tamil nadu

'முதலமைச்சர் போல் துணை முதலமைச்சரும் வெளிநாடு செல்ல ஆசைப்பட மாட்டாரா?'

By

Published : Nov 7, 2019, 2:28 PM IST

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றது போல, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் வெளிநாடு செல்ல ஆசைப்பட மாட்டாரா என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

thirunavukarasu

சென்னை விமான நிலையத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறுகையில், "விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து லாபத்தில் இயங்கிவரும், திருச்சி விமான நிலையத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் பட்டியலில் சேர்த்திருப்பது கண்டனத்திற்குரியது. இப்போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். அதேபோல், லாபத்தில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களையும் அரசு விற்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

முதலமைச்சர் வெளிநாடு சென்றதுபோல துணை முதலமைச்சரும் வெளிநாடு செல்ல ஆசைப்பட மாட்டாரா. அவருக்கு தேவைப்பட்டவர்கள் அங்கிருப்பார்கள் அதனால் விருது கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு தமிழர் விருது வாங்குவது மகிழ்ச்சிதானே.

திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு

சகோதரர் கமல்ஹாசனின் 65ஆவது ஆண்டு பிறந்தநாளை ஒட்டி அவருக்கு எனது வாழ்த்துகள், அவர் நீண்ட ஆயுளோடும் நல்ல உடல் நலத்தோடும் தொடர்ந்து கலைத் துறையிலும் அவர் செய்கிற பணிகளிலும் சிறப்போடு செயல்பட வாழ்த்துகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:'திருவள்ளுவர் சிலைக்கு காவி போர்த்தப்படுவதால் பாஜகவுக்கு எந்தப் பலனும் இல்லை' - திருநாவுக்கரசர் எம்.பி!

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
Body:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

சகோதரர் கமல்ஹாசனின் 65வது ஆண்டு பிறந்த நாளளை ஒட்டி அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் நீண்ட ஆயுளோடும் நல்ல உடல் நலத்தோடும் தொடர்ந்து கலைத்துறையிலும், அவர் செய்கிற பணிகளிலும் தொடர்ந்து சிறந்து சிறப்போடு செயல்பட வாழ்த்துக்கள்.

தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை அரசு விற்க முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது.

விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் பட்டியலில் சேர்த்து இருப்பது கண்டனத்திற்குரியது. இப்போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.

துணை முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு

முதலமைச்சரை போல வெளிநாடு செல்ல துணை முதலமைச்சர் ஆசைப்பட மாட்டாரா என கூறினார்

சென்னையில் காற்று மாசு குறித்த கேள்விக்கு

சென்னையில் பரவியிருக்கும் காற்று மாசுப்பாட்டை தடுக்க அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தகுந்த நடவடிக்கை கவனத்துடன் எடுக்க வேண்டும்.Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details