ETV Bharat / state

'திருவள்ளுவர் சிலைக்கு காவி போர்த்தப்படுவதால் பாஜகவுக்கு எந்தப் பலனும் இல்லை' - திருநாவுக்கரசர் எம்.பி!

author img

By

Published : Nov 6, 2019, 11:41 PM IST

சென்னை : திருவள்ளுவர் சிலைக்கு காவி போர்த்தப்படுவதால் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

congress mp thirunavukarasar

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சித் தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் கட்சியின் உடைய நிர்வாகிகளை கூட்டி மாநிலத் தலைவர் எப்படி தேர்தலை சந்திப்பது குறித்து பேசுவார். பிறகு தோழமைக் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

’ப.சிதம்பரம் கைதைப் பொறுத்தவரை அரசியல் ரிதீயாக பழி வாங்கவோ, நெருக்கடி கொடுக்கவோ, காங்கிரஸ் தலைவர்களை அச்சுறுத்தவோ இதுபோன்ற வழக்குகள் போடப்படுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும்; அந்த வழக்கில் உள்ள அம்சங்களை அவர் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் சந்திப்பார்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவரின் உடல்நிலை சரியில்லை. சிறுசிறு வசதிகூட அவருக்கு செய்து கொடுக்கவில்லை. அவருக்கு மன உளைச்சலையும் உடல் ரிதீயான பிரச்னைகளையும் உருவாக்க அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே செய்வது கண்டனத்துக்குரியது. நீதிபதிகள் கருணையோடு அணுக வேண்டும்' என்று கூறினார்.

மேலும், ’திருவள்ளுவர் எந்த மதம் என்று இதுவரை அவர் குறிப்பிட்டது இல்லை. அவரின் 1330 குறள்களிலும் தெய்வம் ஆதிபகவன் என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால், எந்த மதத்தில் உள்ள தெய்வத்தையும் குறிப்பிட்டு அவர் கூறவில்லை. அவர் பொதுவாகத்தான் திருக்குறள் எழுதியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் எம்.பி., திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு

திருவள்ளுவரின் சிலைக்கு திருநீறுப் பூசப்படுவதாலும், காவி போர்த்தப்படுவதாலும் பாஜகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மக்கள் நகைச்சுவையாக தான் இதை எடுத்துக் கொள்வார்கள். பாஜகவைப் பொறுத்தவரை இது அவசியம் இல்லாத வேலை. வீண் சர்ச்சைகளையும், குழப்பங்களையும் மக்கள் இடத்தில் ஏற்படுத்தி பிளவை உண்டாக்க முயற்சிக்கின்றனர். இதனால் எந்த நன்மையும் அவர்களுக்குக் கிடைக்காது' என்று கூறினார்.

இதையும் படிங்க:

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு - உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறையினர்!

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
Body:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

உள்ளாட்சித் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் கட்சியின் உடைய நிர்வாகிகளை கூட்டி மாநில தலைவர் எப்படி தேர்தலை சந்திப்பது குறித்து பேசுவார் பிறகு தோழமை கட்சிகளுடன் கலந்து பேசி முடிவுயெடுக்கப்படும்

மேயர்,முண்சிபால்டி தலைவர்,பஞ்சாய்த்து தலைவர் இவர்கள் மக்களால் தேர்ந்துதெடுக்கபடுவார்களா இல்லை கவுன்சிர்களால் தேர்ந்துதெடுக்கபடுவார்களா என்று அரசாங்கம் தெளிவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன் அதன் பிறகு பிரதான கட்சியான திமுகவிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என தெறிவித்தார்

ஜி.கே வாசன் பாஜகவில் சேர்வதை பற்றி அவர்யிடம்தான் கேட்க வேண்டும் அவர் பாஜகவில் இனைவதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என கூறினார் மூப்பனார் ஆதரிக்காத பாஜகவில் அவரின் மகன் பாஜகவில் சேருகிறார் என்பது கேள்விக்குறி என கூறினார்

ப சிதம்பரத்தை கைது பொறுத்தவரை அரசியல் ரீதியாக பழி வாங்கவோ நெருக்கடி கொடுக்கவோ காங்கிரஸ் தலைவர்களை அச்சுறுத்தவோ இதுபோன்ற வழக்குகள் போடப்படுகின்றனர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த வழக்கில் உள்ள சார் அம்சங்களை அவர் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் சந்திப்பார் ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவரின் உடல்நிலை சரியில்லை சிறுசிறு வசதிகூட அவருக்கு செய்து கொடுக்கவில்லை அவருக்கு மன உளைச்சலையும் உடல் ரீதியான பிரச்சனைகளையும் உருவாக்க அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே செய்வது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார் நீதிபதிகள் கருணையோடு அனுக வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்

திருவள்ளுவர் எந்த மதம் என்று இதுவரை அவர் குறிப்பிட்டது இல்லை அவரின் 1330 குறள்களிலும் தெய்வம் ஆதிபகவன் என்று குறிப்பிட்டு உள்ளார் ஆனால் எந்த மதத்தில் உள்ள தெய்வத்தையும் குறிப்பிட்டு அவர் கூறவில்லை அவர் பொதுவாகத்தான் திருக்குறள் எழுதியுள்ளார் திருவள்ளுவரின் சிலைக்கு திருநீறு பூசப்படுவதாலும் காவி போர்த்தபடுவதாலும் பாஜகவுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை மக்கள் நகைச்சுவையாக தான் இதை எடுத்துக் கொள்வார்கள் பாஜக பொருத்த வரை இது அவசியம் இல்லாத வேலை வீண் சர்ச்சைகளையும்,குழப்பங்களையும் மக்கள் இடத்தில் ஏற்படுத்தி பிளவை உண்டாக்க முயற்சிக்கின்றனர் இதனால் எந்த நன்மையும் அவர்களுக்குக் கிடைக்காது

பாபர் மசூதி தீர்ப்பு பற்றி கேட்டதற்கு தீர்ப்பு வரட்டும் பார்ப்போம் என்று கூறிச் சென்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.