தமிழ்நாடு

tamil nadu

‘அரசு தன் கடமை செய்கிறது, அதுபோல் மக்களும் கடமையைச் செய்ய வேண்டும்’ - ஜெயக்குமார்

By

Published : Oct 6, 2020, 6:11 PM IST

சென்னை: அரசு தன் கடமை செய்வதுபோல், மக்களும் தங்களது கடமையைச் செய்தால் கரோனா வாராது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

சென்னை ராயபுரம் ஆடுதொட்டி பகுதியில் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான உணவு பொருள்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “பொதுமக்களின் நலன்களுக்காக கரோனா காலத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது. இதேபோல் ராயபுரத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

கரோனாவைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு வழிகாட்டுதலின்படி முகக் கவசம் அணிவது, கை கழுவுவது, சமூக விலகல் கடைபிடிப்பது போன்றவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' வலைதளத்தின் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப்பதிவு !

ABOUT THE AUTHOR

...view details