தமிழ்நாடு

tamil nadu

காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கை தமிழில் வெளியீடு

By

Published : Sep 28, 2022, 4:12 PM IST

காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கை மாநகராட்சி தமிழில் வெளியீடு!

காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தனது இணையதளத்தில் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னைக்கான காலநிலை மாற்றம் எதிரான வரைவு செயல் திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மீதான கருத்துகளை செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிவு செய்ய பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது. ஆனால் மாநகராட்சி இணையதளத்தில் உள்ள காலநிலை வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது.

தமிழில் இல்லாததால் இதுகுறித்து சாமானிய மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய இயலவில்லை என தெரிவித்து வந்ததனர். இந்நிலையில் சிபிஐஎம், பாமக, பூவுலகின் நண்பர்கள் போன்ற பல்வேறு கட்சிகளும் , சூழலியல் இயக்கங்களும் காலநிலை செயல் திட்டத்தை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் 25ஆம் தேதி வரை காலநிலை செயல்திட்டம் தமிழில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்து பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆம் தேதி மாநகராட்சி சார்பில் இந்த காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கை தமிழில் வெளியிடப்படும் அத்துடன் 1 மாதம் கால நீட்டிப்பு செய்வதாக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று (செப்.28) இந்த காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கை தமிழில் மொழிபெயர்த்து தனது இணையதளத்தில் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம் செயல்திட்டம் தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் chennaiclimateactionplan@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இக்கட்டான சூழலில் உதவும் இன்சூரன்ஸ் ரைடர்.

ABOUT THE AUTHOR

...view details