தமிழ்நாடு

tamil nadu

முதுகலை பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம்

By

Published : Jan 18, 2021, 9:51 PM IST

சென்னை: முதுகலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை எழுத ஜனவரி 19ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு இயக்குநர் அறிவித்துள்ளார்.

anna university
அண்ணா பல்கலை

இது தொடர்பாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2021 குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,’அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைகழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள எம்இ, எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பிஏ., மற்றும் எம்சிஏ ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு உரிய நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு ஜனவரி 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி மதியம் 5மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை இறுதியாக பிப்ரவரி 17ஆம் தேதி வரை சரிப்பார்த்து விண்ணப்பிக்கமுடியும்.

மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்படும். எம்சிஏ படிப்புக்கான நுழைவுத்தேர்வு மார்ச் மாதம் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்பிஏ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு மார்ச் 20-ஆம் தேதி மதியம் 2 30 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெறும்.

எம்இ ,எம்டெக் ,எம் ஆர்க், எம் பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 21-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் annanin.edu, tancet.annauniv.edu ஆகிய இணைய தளங்களில் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சட்டபேரவைத்தேர்தல் அறிவிப்புக்குப்பின் பள்ளி பொதுத்தேர்வு அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details